குஜராத் மாநிலம் கக்ராப்பூர் பகுதியில் உள்ள அணுமின் நிலையத்தின் மூன்றாவது அணு உலை கட்டுமானப் பணிகள் 2010ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மின் உற்பத்திக்கு முந்தைய கிரிட்டிகாலிட்டி(Criticality) எனப்படும் தயார் நிலையை இந்த அணு உலை தற்போது அடைந்துள்ளது.
அணு விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு - அனு விஞ்ஞானிகள் மோடி பாராட்டு
காந்திநகர்: குஜராத் மாநிலம் கக்ராப்பூர் அணுமின் நிலைய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Modi
இதையடுத்து, கக்ராப்பூர் அணு விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், 'இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 700 மெகாவாட் KAPP-3 அணு உலை மேக் இன் இந்தியா திட்டத்திற்கு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. இதற்கு விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள். இதுபோன்ற சாதனைகளை எதிர்காலத்தில் புரிய இது உந்துசக்தியாக விளங்கும்' எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:இந்திய விமானப் படையின் உயர்மட்ட அலுவலர்கள் சந்திப்பின் பின்னணி என்ன?