தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாபெரும் வெற்றிபெற்ற நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா - வாழ்த்து தெரிவித்த மோடி - Jacinda Ardern

டெல்லி: பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மோடி
மோடி

By

Published : Oct 18, 2020, 6:05 PM IST

நியூசிலாந்து நாட்டில் நேற்று(அக்.17) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று, அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், தற்போதைய பிரதமர் ஜெசிந்தா ஆர்டனின் தொழிலாளர் கட்சி 49 விழுக்காடு வாக்குகள் பெற்று பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் தேசியக் கட்சி 27 விழுக்காடு வாக்குகள் பெற்றுள்ளது.

24 ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு கட்சி பெரும்பான்மை பெறுவது இதுவே முதல்முறையாகும். கடந்த 2017ஆம் ஆண்டு, இரண்டு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு தொழிலாளர் கட்சி ஆட்சி அமைத்தது. 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, தொழிலாளர் கட்சி முதன்முறையாக தனித்து ஆட்சி அமைக்கவுள்ளது.

இந்நிலையில், நியூசிலாந்து பிரதமராக பதவியேற்கவுள்ள ஜெசிந்தாவுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்ற நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

கடந்த ஆண்டு, அவருடன் மேற்கொண்ட சந்திப்பைக் நினைவுகூர விரும்புகிறேன். இருநாட்டு உறவை மேலும் மேம்படுத்த எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கர்நாடகாவில் கனமழை; பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள உள்கட்டமைப்பு!

ABOUT THE AUTHOR

...view details