இலங்கையில் 8ஆவது அதிபர் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பொதுஜன பெரமுனா சார்பில் போட்டியிட்ட அந்நாட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சவின் இளைய சகோதரரான கோத்தபய ராஜபக்ச 50 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
கோத்தபயவின் வெற்றிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி கோத்தபய ராஜபக்சவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
அதில், "இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சவுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இருநாட்டு உறவையும் வலுவூட்டும் நோக்கில் உங்களுடன் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன். தேர்தலை வெற்றிகரமாக நடத்திய இலங்கை மக்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஈழப்போரை முன்னிருந்து நடத்தியவர், கோத்தபய ராஜபக்ச என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இலங்கை அதிபர் தேர்தல்: தோல்வியை ஒப்புக்கொண்ட சஜித் பிரேமதாச