தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பியர் கிரில்ஸுக்கு இந்தி தெரியுமா? விளக்குகிறார் மோடி! - Modi

டெல்லி: இந்தி தெரியாத பியர் கிரில்ஸுடன் உரையாட தொழில்நுட்பம் உதவியதாக பிரதமர் மோடி மேன் vs வைல்ட் பற்றி சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார்.

Man vs Wild

By

Published : Aug 25, 2019, 4:40 PM IST

பிரதமர் மோடி கலந்துகொண்ட மேன் vs வைல்ட் நிகழ்ச்சி டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஆகஸ்ட் 12ஆம் தேதி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பியர் கிரில்ஸ் ஆங்கிலேயர் ஆவார். இவருக்கு இந்தி தெரியாதபோதிலும் நிகழ்ச்சியில் மோடி பேசியதை சரியாக புரிந்துகொண்டு பதிலளித்தார். இது பலரையும் குழப்பியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று மான் கி பாத் நிகழ்ச்சியில் மோடி, "நிகழ்ச்சியை பார்த்த மக்களுக்கு பியர் கிரில்ஸுக்கு எப்படி இந்தி தெரியும் என்ற சந்தேகம் உள்ளது.

சிலர் என்னிடம் நிகழ்ச்சி தொகுக்கப்பட்டதா அல்லது பலமுறை எடுக்கப்பட்டதா எனக் கேள்வி எழுப்பினர். பியர் கிரில்ஸுக்கும் எனக்கும் பாலமாக இருந்து உதவியது தொழில்நுட்பம். அவரின் செவிக்கு வையர் இல்லாத சாதனம் பொருத்தப்பட்டது. அந்த சாதனம் நான் பேசிய இந்தியை அவருக்கு ஆங்கிலத்தில் உடனடியாக அளித்தது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details