குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தனது 75ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகள். குடியரசு தலைவரின் வளமான பார்வையும், அறிவும் இந்தியாவின் மிகப்பெரிய சொத்து. பாதிக்கப்படுபவர்களுக்கு சேவை செய்வதில் அவர் மிகவும் இரக்கமுள்ளவர். அவரது நல்ல ஆரோக்கியத்திற்காகவும், நீண்ட ஆயுளுக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்”என பதிவிட்டுள்ளார்.
அதேபோல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.