பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் அந்நியச் செலவாணி விகிதத்தின்படி இந்திய ஜிடிபி உலக அளவில் ஐந்தாவது இடத்தில் இருப்பதாக கூறிவருகின்றனர். இதனை மறுத்துள்ள பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, அந்நியச் செலவாணி விகிதம் என்பது காலத்தை சார்ந்தது என்றும், ஒவ்வொரு நேரத்திலும் அது மாறிக்கொண்டே இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
‘மோடிக்கும், அருண் ஜேட்லிக்கும் பொருளாதாரத்தை பற்றி ஒன்றுமே தெரியாது’ -கொந்தளிக்கும் சு. சுவாமி - மோடி
கொல்கத்தா: இந்தியாவின் ஜிடிபி உலக அளவில் ஐந்தாவது இடத்தில் இருப்பதாக மோடியும், அருண் ஜெட்லியும் கூறிவருவது, பொருளாதாரம் குறித்து அவர்களுக்கு இருக்கும் அறியாமையையே வெளிப்படுத்துவதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
கொந்தளிக்கும் சு. சாமி
அமெரிக்காவின் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள சுப்பிரமணியன் சுவாமி, பிரதமருக்கும், அருண் ஜேட்லிக்கும் பொருளாதாரம் பற்றித் தெரியாது என்பதால் இந்திய ஜிடிபி ஐந்தாவது இடத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளாக அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், அந்நியச் செலவாணி விகிதத்தின்படி இந்தியா தற்போது அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Last Updated : Mar 24, 2019, 1:38 PM IST