தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஃபோனி புயல் பாதிப்புகளை பார்வையிட ஒடிசா வந்த மோடி! - பிரதமர் நரேந்திர மோடி

புவனேஷ்வர்: ஃபோனி புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒடிசா மாநிலத்திற்கு வந்தடைந்தார்.

ஃபோனி புயல் பாதிப்புகளை பார்வையிட ஒடிசா வந்தடைந்த பிரதமர்!

By

Published : May 6, 2019, 10:01 AM IST

ஃபோனி புயல் ஒடிசா வழியாக கரையைக் கடந்ததில், பல்வேறு பகுதிகள் உருக்குலைந்து போனது. இதில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தும், ஏராளமான வீடுகள், வாகனங்கள் சேதமடைந்தும் ஒடிசா மாநிலம் பெரும் சேதத்திற்கு உள்ளானது.

இதனைத் தொடர்ந்து ஒடிசாவில் கடந்த இரண்டு நாட்களாக மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் பல பகுதிகளில் இருந்தும், சில மாநில அரசுகள் சார்பாகவும், நிவாரணங்களை வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் ஒடிசா கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

ஃபோனி புயல் பாதிப்புகளை பார்வையிட ஒடிசா வந்தடைந்த பிரதமர்!

இந்நிலையில் ஃபோனி புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி இன்று புவனேஷ்வர் வந்தடைந்தார். இதில் விமான நிலையத்திலேயே பிரதமரை, அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் வரவேற்றார்.

ABOUT THE AUTHOR

...view details