இதுகுறித்து அவரது அறிவிப்பில், உத்திரப் பிரதேச மாநிலம் அவுரியாவில் நடந்த சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும். விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ .50,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உ.பி. விபத்து; பிரதமர் ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி
டெல்லி: அவுரியா சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
![உ.பி. விபத்து; பிரதமர் ரூ.2 லட்சம் நிவாரணம் pm-modi-approves-rs-2-lakh](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7229522-thumbnail-3x2-l.jpg)
pm-modi-approves-rs-2-lakh
ஏற்கனவே உத்தரப் பிரதேச மாநில அரசு விபத்தில் உயிரிழந்தவர்கள் 24 பேரின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'உ.பி. விபத்து செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்' - எடப்பாடி பழனிசாமி