மருத்துவர்களின் சேவைகளை போற்றும் வகையில் டாக்டர் பி.சி. ராய் பிறந்த நாளான இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர்கள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி பட்டய கணக்காளர்கள் தினமும் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், மருத்துவர்களுக்கும் பட்டய கணக்காளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார். அதில், “கரோனாவிற்கு எதிராக களத்தில் முதலில் நின்று போராடும் மருத்துவர்களை இந்தியா வாழ்த்துகிறது, வணங்குகிறது” என மருத்துவர்களுக்கு வாழ்த்துக் கூறியுள்ளார்.