தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சுகாதாரத்துறையில் புரட்சியை ஏற்படுத்த தேசிய இணைய சுகாதார திட்டம் - மோடி - National Digital Health Mission

டெல்லி: சுதாதாரத்துறையில் புரட்சியை ஏற்படுத்தும் விதமாக தொழில்நுட்ப உதவியுடன் தேசிய இணைய சுகாதார திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மோடி
மோடி

By

Published : Aug 15, 2020, 11:31 AM IST

நாட்டின் 74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றினார். இதையடுத்து, தேசிய இணைய சுகாதார திட்டத்தை அறிமுகம் செய்துவைத்தார்.

பின்னர் பேசிய அவர், "உடல்நிலை குறித்த விவரங்கள் அடங்கிய அடையாள அட்டை அனைத்து இந்தியர்களுக்கும் வழங்கப்படும். மருத்துவ வசதிகளை பெற இந்த அடையாள அட்டை உதவும்.

தேசிய இணைய சுகாதார திட்டத்திற்கான புதிய பரப்புரை இன்று (ஆக.15) முதல் தொடங்கப்படவுள்ளது. நாட்டின் சுகாதாரத்துறையில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் நீங்கள் மருத்துவமனைக்கு செல்லும்போது அதுகுறித்த விவரங்கள் அடையாள அட்டையில் இணைக்கப்படும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு கீழ் வரும் தேசிய இணைய சுகாதார திட்டம், சுகாதாரத்துறையின் வெளிப்படைத்தன்மை, திறனை மேம்படுத்தும் வகையில் வகுக்கப்பட்டுள்ளது.

கரோனா முன்கள பணியாளர்களுக்கு நாட்டின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கரோனா மருந்து அனைவருக்கும் கிடைக்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது" என்றார்.

இந்தத் திட்டத்தின் கீழ், உடல்நிலை பரிசோதனை, மருந்துகள், மருத்துவ பிரிசோதனை முடிவுகள் ஆகிய விவரங்கள் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அடையாள அட்டையில் இணைக்கப்படும். தொலைத் தொடர்பு, இணைய மருந்தகங்கள் மூலம் கிராமப்புற மக்களுக்கு மருத்துவ வசதி செய்துத் தரப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சுயசார்புக்கு குரல் கொடுத்த மோடி!

ABOUT THE AUTHOR

...view details