இந்தியாவின் 17-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி தேதி தொடங்கி மே 19 முடிவடைகிறது. மொத்தம் உள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குமான தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் சில மாநிலங்களில்சட்டப்பேரவை தேர்தலும், சட்டப்பேரவை இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23-ஆம் தேதி எண்ணப்படுகிறது.
பரப்புரைக்காக தெலங்கானா வரும் மோடி, ராகுல்! - காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
தெலங்கானாவில் பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவுள்ளனர்.
rahul and modi
இதில் தெலங்கானாவில் ஏப்ரல் 11ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தெலங்கானாவில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவுள்ளனர்.