தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குருதாஸ் தாஸ்குப்தா மறைவு, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி - குருதாஸ் தாஸ்குப்தா மறைவு குடியரசு தலைவர் இரங்கல்

கொல்கத்தா: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த அரசியல் தலைவரான குருதாஸ் தாஸ்குப்தா மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Gurudas das gupta

By

Published : Oct 31, 2019, 1:28 PM IST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தலைசிறந்த நாடாளுமன்றவாதியுமான குருதாஸ் தாஸ் குப்தா நுரையீரல் புற்றுநோய் பாதிப்பால் இன்று காலமானார். 83 வயதான குருதாஸ் தாஸ்குப்தாவின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் தனது ட்விட்டர் பதிவில், குருதாஸ் தாஸ் குப்தாவின் மறைவானது வங்கத்திற்கும், இந்தியாவுக்கும் பேரிழப்பு என்று தெரிவிரித்துள்ளார். பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் வலிமையான குரலாக ஒலித்தவர் குருதாஸ் தாஸ்குப்தா எனப் புகழாரம் சூட்டி தனது அஞ்சலியைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இரங்கல்

மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா, குருதாஸ் தாஸ்குப்தாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. தலைசிறந்த நாடாளுமன்றவாதியையும், தொழிலாளர் பிரதிநிதியையும் நாடு இழந்துள்ளது என்று தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சஞ்சய் நிருபம், முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு உள்ளிட்டோர் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

மம்தா இரங்கல் பதிவு

ABOUT THE AUTHOR

...view details