தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்தார்பூர் சாலை திட்டத்தைத் திறந்துவைத்தார் பிரதமர் நரேந்திர மோடி! - Integrated Check Post Kartarpur Corridor

சண்டிகர்: பாகிஸ்தானில் இருக்கும் சீக்கிய மத குருவான குருநானக்கின் நினைவிடம் அமைந்திருக்கும் பகுதியை இணைக்கும் கர்தாபூர் சாலை திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.

Kartarpur Corridor

By

Published : Nov 9, 2019, 2:02 PM IST

பாகிஸ்தானில் தர்பார் சாகிப் குருத்துவாரா அமைந்துள்ளது. இதற்கு பஞ்சாபிலிருந்தும் நாடு முழுவதிலுமிருந்து சீக்கியர்கள், குருநானக்கில் இந்த நினைவிடத்துக்குச் செல்ல வசதியாக இருநாடுகளுக்குமிடையே 4 கி.மீ. தொலைவுக்குச் சாலை அமைக்கப்பட்டது.

குருநானக்கின் 550ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கர்தார்பூர் வழித்தடத்தை ஒரே நேரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் ஒரே நேரத்தில் இரு எல்லைகளிலும் சாலையில் முகப்பை திறந்துவைத்தனர்.

தர்பார் சாகிப் குருத்துவாரா

சீக்கிய மதத்தை உருவாக்கிய குருநானக் தன்னுடைய கடைசி காலத்தில் கர்தார்பூர் பகுதியில்தான் வாழ்ந்தார். இதனால் கர்தார்பூர் பகுதியில் எல்லா வருடமும் தர்பார் சாஹிப் என்ற பெயரில் விழா நடத்தப்படும். இங்குச் செல்வது சீக்கியர்களின் கடமைகளில் ஒன்று. ஆனால் இதற்குச் சரியான பாதை இல்லாததாலும் விசா எடுத்துச் செல்வதில் சிரமம் இருந்ததாலும் அடிக்கடி விழா பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details