ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் சுத்தமான குடிநீரை கிராமப்புறத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2024ஆம் ஆண்டுக்குள் விநியோகம் செய்ய மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது. அந்த வகையில், மணிப்பூரில் 16 மாவட்டங்களில் உள்ள 2,80,756 வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்கவுள்ள இந்நிகழ்ச்சியில், மாநில ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தியாவில் 19 கோடி வீடுகள் உள்ளன. இதில், 24 விழுக்காடு வீடுகளுக்கு மட்டுமே குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.