பிரதமர் நரேந்திர மோடி, மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் பேசிய அவர், "கரோனா காரணமாக உலகில் விநியோகச் சங்கிலி தொடர்பான பல இடையூறுகள் ஏற்பட்டன. ஆனால் நாம் அனைத்துச் சங்கடங்களிலிருந்தும் ஒரு புதிய கற்றலைப் பெற்றோம். நாட்டில் தற்சார்பு என்ற புதிய திறன் பிறப்பெடுத்தது.
நாம் தற்சார்பு பாரதத்தை ஆதரிக்கிறோம், ஆனால் நமது தயாரிப்பாளர்களும் ஒரு விஷயத்தை நன்கு தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது அவர்கள் தங்கள் தயாரிப்புகளில் சற்றுக்கூட தரக்குறைவு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பூஜ்யம் பாதிப்பு, பூஜ்யம் குறைபாடு என்ற எண்ணத்தோடு நாம் பயணிக்க வேண்டிய காலம் கனிந்துவிட்டது.