பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களிடையே பேசிய மோடி, "கோடிக்கணக்கான பெண்களின் ஆதரவோடு முத்தலாக் நடைமுறைக்கு எதிராக சட்டம் இயற்றினோம். புதிய இந்தியாவில் ஊழல், பயங்கரவாதம், குடும்ப ஆட்சி ஆகியவற்றை தடுத்துள்ளோம். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இதற்கு முடிவு கட்டியுள்ளோம்.
'புதிய இந்தியாவில் ஊழலையும், பயங்கரவாதத்தையும் தடுத்துள்ளோம்' - New India
பாரிஸ்: புதிய இந்தியாவில் ஊழல், பயங்கரவாதம், குடும்ப ஆட்சி ஆகியவற்றை தடுத்துள்ளோம் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
!['புதிய இந்தியாவில் ஊழலையும், பயங்கரவாதத்தையும் தடுத்துள்ளோம்'](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4221101-thumbnail-3x2-modi.jpg)
Modi
இந்தியா - பிரான்ஸ் உடனான கூட்டணிதான் இந்ஃபிரா. சூரிய ஒளி திட்டத்தில் இருந்து சமூக திட்டம் வரையிலும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இருந்து பாதுகாப்புதுறை வரை இந்த கூட்டணி நீள்கிறது. பாஜக தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்ற 75 நாட்களில், பல முடிவுகளை எடுத்துள்ளோம். குடிநீர் பிரச்னையை தீர்க்க ஜல்சக்தி அமைச்சகத்தை அமைத்துள்ளோம். குழந்தைகளின் பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவைக்காக பல புரட்சிகர முடிவுகளை எடுத்துள்ளோம்" என்றார்.