கடந்த மாதம் 24 ஆம் தேதி விவசாயிகளுக்கு தலா 2000 ரூபாயை மூன்று கட்டமாக வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக 2.74 கோடி விவசாயிகளுக்கு 2000 ரூபாய் வழங்கபட்டுள்ளது. இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தன.
விவசாயிகளுக்கு ரூ.2000 வழங்கும் திட்டம் - 2ம் கட்டமாக ஏப்ரலில் தொடங்கும்! - kisan
டெல்லி: விவசாயிகளுக்கு ரூ.2000 வழங்கும் இரண்டாம் கட்ட திட்டத்தை அடுத்த மாதம் முதல் செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விவசாயிகளுக்கு 2000 ரூபாய் வழங்கும் 2 ஆம் திட்டம்
அதன் அடிப்படையில், விவசாயிகளுக்கு இரண்டாம் கட்டமாக 2000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இந்நிலையில், மார்ச 10 தேதி வரை இத்திட்டத்தில்பதிவுசெய்யப்பட்ட விவசாயிகளுக்கு 2000 ரூபாய் வழங்குவதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, மேற்கு வங்கம், டெல்லி, சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து விவசாயகள் பட்டியல் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.