இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி, “கரோனா பாதிப்பு இந்த வார இறுதியில் 50 லட்சத்தைக் கடந்துவிடும். தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்தது 10 லட்சமாவது இருக்கும்.
மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாப்பதே தற்சார்பு இந்தியா - ராகுல் குற்றச்சாட்டு - கரோனா வைரஸ் பாதிப்பு
டெல்லி: பிரதமர் மோடி மயில்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டிவருவதால் மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாக்கும் நிலையில் உள்ளனர். இதைத்தான் மோடி அரசு தற்சார்பு இந்தியா எனத் தெரிவிக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இந்தத் திட்டமிடப்படாத ஊரடங்கு ஒரு மனிதனின் சுய கௌரவத்திற்காக அமல்படுத்தப்பட்டதால், தொற்று அதிகளவில் பரவ காரணமாக அமைந்தது. அதுமட்டுமின்றி பல்வேறு மக்களும் பல சிரமங்களுக்கு உள்ளாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
மோடி தலைமையிலான அரசு தற்சார்பு இந்தியா எனச் சொல்லிக்கொண்டுள்ளது. ஏனெனில், நாட்டைக் காக்க வேண்டிய பிரதமர் மயில்களை வளர்ப்பதில் தன்னுடைய நேரத்தைச் செலவிட்டுவருவதால், மக்கள் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ளும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதுவே, அவர்களது தற்சார்பு இந்தியா" எனக் குறிப்பிட்டுள்ளார்.