தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இ-வித்யா இணைய கல்வி, 1 முதல் 12 வரை டிவி சேனல்கள்! அதிரடி காட்டிய நிதியமைச்சர் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிற்கும் தனி கல்விச் சேனல் தொடங்கப்படும் என்றும் ஆன்லைன் மூலம் கல்வி கற்பதை ஊக்குவிக்க இ-வித்யா என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

evidhya
evidhya

By

Published : May 17, 2020, 7:26 PM IST

Updated : May 17, 2020, 7:56 PM IST

ஹைதராபாத்: பள்ளி மாணவர்கள் பயன்பெற இ-வித்யா எனும் புதிய இணைய வழிக் கல்வித் திட்டத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

அதிரடியாக 5ஆவது, இறுதிக் கட்டமுமான பொருளாதார திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அவர் தனது அறிவிப்பின் போது, “பள்ளிக்கல்விக்காக ஏற்கனவே மூன்று தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு அனுமதியுள்ளது. தற்போது புதிதாக மேலும் 12 தொலைக்காட்சி சேனல்கள் கல்விக்காக உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இதன்படி ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிற்கும் தனி கல்விச் சேனல் தொடங்கப்படும்” என்று கூறினார்.

ரவுண்ட் அப்: நிதியமைச்சரின் நான்கு நாள் அறிவிப்புகள் ஒரு பார்வை!

மேலும், “புதிய பாடப்புத்தகங்கள் இ-பாடசாலையில் சேர்க்கப்பட்டுள்ளன, மாநிலங்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான நேரடியாக உரையாடும் அமர்வுகளை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்வி நேரத்தை பகிர்ந்து கொள்ள மாநிலங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

கல்வித் தொலைக்காட்சி நாளொன்றுக்கு 4 மணி நேரம் ஒளிபரப்பப்படும். ஆசிரியர்கள் மாணவர்கள் இடையேயான உரையாடல் கல்வித் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும்.

100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு ரூ. 40,000 கோடி

தகவல் இணையம் மூலம் கல்வி கற்பதை ஊக்குவிக்க பிரதம மந்திரி இ-வித்யா என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும். இவை தொழில்நுட்பம் சார்ந்த கல்வி மையமாக இருக்க வேண்டும். டிஜிட்டல் / இணைய கல்விக்கான அணுகலுக்காக திட்டம் தொடங்கப்படவுள்ளது. இந்தியாவின் சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 2020 மே 30ஆம் தேதிக்குள் தானாகவே இணையப் படிப்புகளைத் தொடங்க அனுமதிக்கப்படும்" என்றார்.

Last Updated : May 17, 2020, 7:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details