கரோனா வைரஸ் பரவலால் உலக நாடுகள் பெரும் பாதிப்படைந்துள்ளன. குறிப்பாக சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் வைரஸ் பரவலால் கோவிட் 19 நோய் தாக்கி பலர் உயிரிழந்தனர். இதுவரை இந்தியாவில் 223 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து உயிரிழப்பு சம்பவங்கள் இதனால் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பல கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துவருகிறது.
இந்நிலையில், பல்வேறு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரோந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அளிக்க வேண்டிய பயிற்சி குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங், மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இந்த வீடியோ கான்பரன்சிங்கில் பங்கேற்றனர்.