முன்னாள் டெல்லி காவல் ஆணையர் வேத் மார்வா வயதுமூப்பின் காரணமாக கோவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு காலமானார். அவரின் மறைவுக்குப் பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில், பொது வாழ்க்கையில் மார்வாவின் பங்கை என்றென்றும் நினைவுகூரலாம் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பொது வாழ்க்கையில் அவரின் சிறந்த பங்கினை என்றென்றும் நினைவுகூரலாம். ஐபிஎஸ் அலுவலராகப் பணியாற்றியபோது, அவர் வெளிப்படுத்திய நிலையான துணிச்சல் தனித்து நிற்கும். மதிப்பிற்குரிய அறிவுஜீவி என்றும் அவரைக் கூறலாம். அவரின் மறைவு வருத்தமளிக்கிறது. குடும்பத்தாருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.