பிரதமர் நிவாரண தொகையில் வென்ட்டிலேட்டர்கள் வாங்க 2000 கோடி ரூபாய் ஒதுக்கீடு - பிரதமர் நிவாரண தொகை
![பிரதமர் நிவாரண தொகையில் வென்ட்டிலேட்டர்கள் வாங்க 2000 கோடி ரூபாய் ஒதுக்கீடு Modi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7191234-thumbnail-3x2-pm.jpg)
10:52 May 14
டெல்லி: கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமர் நிவாரணை தொகையில் வென்ட்டிலேட்டர்கள் வாங்குவதற்காக 2,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் நோய் இந்தியாவில் வேகமாக பரவிவருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 78,000ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பு காரணமாக 2,549 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் தடுப்பு நடவடிக்கைகாக பல்வேறு தரப்பினர் பிரதமர் நிவாரண தொகையில் நிதி அளித்துள்ளனர். இந்தத் தொகையிலிருந்து 3,100 கோடி ரூபாய் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
அதில், 2,000 கோடி ரூபாய் வென்ட்டிலேட்டர்கள் வாங்குவதற்காகவும் 1,000 கோடி ரூபாய் வெளிமாநில தொழிலாளர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை சரியாக பயன்படுத்துவதற்கு அறக்கட்டளை ஒன்றை பிரதமர் மோடி மார்ச் 27ஆம் தேதி அமைத்தார். பாதுகாப்புத் துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர் ஆகியோர் இதன் உறுப்பினர்களாக உள்ளனர்.
இதையும் படிங்க: பொருளாதாரத்தை மீட்டெடுக்க மோடி அரசு உறுதியாக உள்ளது - அமித் ஷா