நவீன செவிலியர் பணியின் நிறுவனர் என்று கருதப்படும் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளான இன்று உலக சுகாதார நிறுவனம் சர்வதேச செவிலியர் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அவரது 200ஆவது பிறந்த நாளைக் குறிக்கிறது.
இதனை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “நமது பூமியை ஆரோக்கியமாக வைத்திருக்க கடிகாரத்தைப் போல சுற்றிச்சுழன்று பணியாற்றி, தனித்துவமான தொண்டு செய்யும் செவிலியர்களுக்கு நன்றி தெரிவிக்க சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
தற்போது, கரோனா வைரசுக்கு (தீநுண்மி) எதிரான உலகளாவிய போரில் நமது தாய் நாட்டு மக்களை காப்பதற்காக பெரும் பணிகளை மேற்கொண்டு வருகின்ற செவிலியர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் நாம் அனைவரும் மிகவும் நன்றிக்கடன்பட்டவர்களாக இருக்கிறோம்.