தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரதமர் பத்தரை மாற்றுத் தங்கம்; அவரை சந்தேகப்படாதீங்க - ராஜ்நாத் சிங் - Rajnath Singh on CAA

டெல்லி : குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகப் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் நரேந்திர மோடி பத்தரை மாற்றுத் தங்கம்; அவரது எண்ணங்களை சந்தேகப்பட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

rajnath singh, ராஜ்நாத் சிங்
rajnath singh

By

Published : Feb 1, 2020, 9:51 AM IST

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜகவுக்கு ஆதரவாக மெஹ்ரௌளியில் பரப்புரை மேற்கொண்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து இஸ்லாமியர்களிடையே எதிர்க்கட்சியினர் தவறான புரிதலை உருவாக்கிவருகிறனர்.

நம் இஸ்லாமிய தோழர்களை நோக்கி யாரும் கைநீட்ட மாட்டார்கள். நம் பிரதமர் பத்தரை மாற்றுத் தங்கம்; அவரது எண்ணங்களை சந்தேப்பட வேண்டாம்" எனப் பேசினார்.

தொடர்ந்து டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை சாடி பேசிய அவர், "மத்திய அரசுடன் சுமுகமாகச் செயல்படுவதற்குப் பதிலாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலோ, தேவலையில்லாமல் மல்லுக்கட்டிவருகிறார். இதனால் ஐந்து ஆண்டுகள் சண்டையிலேயே கழிந்ததுதான் மிச்சம்.

அவர் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக இருக்கிறார். மக்களுக்கு வாக்களித்துவிட்டால் அதனை நிறைவேற்ற தலைவர்கள் எந்த எல்லைக்கும் செல்ல வேண்டும். அப்படியில்லை என்றால் வாக்குறுதி கொடுக்காமல் இருப்பதே நல்லது" என்றார்.

இதையும் படிங்க : 'கோட்சேவும் மோடியும் ஒன்னு' - ராகுல் காந்தி

ABOUT THE AUTHOR

...view details