புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2019 நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சார்ந்த 6908 மாணவர்களும் 7786 மாணவிகளும் என மொத்தம் 14694 மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். இன்று வெளியான தேர்வு முடிவுகளின் படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற 13657 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
பிளஸ் டூ தேர்வு முடிவுகள்: புதுச்சேரியில் 92.9% தேர்ச்சி - காரைக்கால்
புதுச்சேரி: பிளஸ் டூ தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 92.9 சதவீகிதமாக உள்ளது.
புதுச்சேரி மாவட்டம் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் சேர்த்து தேர்ச்சி விகிதம் 93 .80% ஆகும். புதுச்சேரி மாநில அளவில் அரசு பள்ளி தேர்ச்சி விகிதம் 85.62சதவீதம் என புதுச்சேரி பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.