நாட்டின் நிதிநிலை அறிக்கையினை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று தாக்கல்செய்து உரை நிகழ்த்தினார். இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களின் அதிருப்தியை தெரிவித்துவருகின்றனர்.
மத்திய நிதிநிலை அறிக்கையில் பெருகிவரும் வேலைவாய்ப்பின்மை, நசிந்த தொழில்களை மீட்டெடுக்கும் முயற்சிகள் எதுவும் இல்லை என அவர்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
'இது வரலாற்றில் மிக நீண்ட வெற்று உரை' என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி உடற்பயிற்சி செய்யும் அந்தக் காட்சி சிறிது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அந்தக் காட்சியில் பின்னணி இசைக்கோர்ப்பும் உள்ளது. அது பிரபல கார்ட்டூன் நிகழ்ச்சியை நினைவுப்படுத்துகிறது. இந்தக் காணொலியுடன் ராகுல் காந்தி கருத்து ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
அதில், “தயவுகூர்ந்து, உங்களது மாயாஜால உடற்பயிற்சியை இன்னும் முயற்சித்து பாருங்கள். உங்களுக்குத் தெரியாது. அது பொருளாதாரத்தைக் தொடங்கக்கூடும்” எனத் தெரிவித்துள்ளார். அதாவது இந்தியப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியைக் குறிப்பிட்டு ராகுல் காந்தி இவ்வாறு ட்வீட் செய்துள்ளார்.
இதையும் படிங்க: இந்து மகா சபை தலைவர் சுட்டுக் கொலை