தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

என் மகளை கருணைக்கொலை செய்யுங்கள் - தாயின் கடிதம்!

விஜயவாடா: மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகளை கருணைக்கொலை செய்து விடுங்கள் என ஆந்திர ஆளுநருக்கு கடிதம் எழுதிய தாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

mercy kill

By

Published : Aug 31, 2019, 3:10 PM IST

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் வசிப்பவர் ஸ்வர்ணலதா. இவருக்கு ஜானவி என்ற குழந்தை உள்ளது. அக்குழந்தை மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அக்குழந்தையின் தாய் ஸ்வர்ணலதா, அம்மாநில ஆளுநருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், தனது மகள் 4 வயது முதலே மனநலம் பாதிக்கபட்டு, கடந்த 8 ஆண்டுகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் தன் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் இதற்கு மேல் சிக்கிச்சை அளிக்க மறுத்துவிட்டார். இதனால் மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுங்கள், இல்லை எனது மகளை கருணைக்கொலை செய்யுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

என் மகளை கருணைக்கொலை செய்யுங்கள்

குழந்தையை பெற்ற தாயே அக்குழந்தையை கருணைக்கொலை செய்ய அணுமதிக்கக் கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதியது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details