குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விரைந்து விசாரிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். மேலும், இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்கவில்லை எனவும், சில இடைக்கால உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு, சபரிமலை குறித்த வாதங்கள் முடிவடைந்த பிறகு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தது. ஹோலி விடுமுறைக்குப் பின்னர் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் குறித்து கபில் சிபல் முறையிடலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.