தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விதிகளை மீறியதாக கூகுள் பே மீது குற்றச்சாட்டு - ரிசர்வ் வங்கிக்கு நோட்டிஸ் அனுப்பிய டெல்லி உயர் நீதிமன்றம்! - டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: ஆர்பிஐ விதிமுறைகளை கூகுள் பே செயலி மீறியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக, ரிசர்வ் வங்கிக்கும், குற்றச்சாட்டு தெரிவித்த நபர்களுக்கும் டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

pay
pay

By

Published : Aug 24, 2020, 7:25 PM IST

இந்தியாவில் பல கோடி பேர் உபயோகிக்கும் செயலியாக கூகுள் பே உள்ளது. ஒருவர் மற்றொரு நபருக்கு பணம் அனுப்புவதை மிகவும் எளிதாக்கியது மட்டுமின்றி, ஒவ்வொரு முறை பணப்பரிமாற்றம் நடைபெறும்போதும் ’ரிவார்ட்ஸ்’ வழங்கியதுதான் கூகுள் பேவின் வெற்றிக்கு வழிவகுத்தது.

இருப்பினும் கூகுள் பே செயலி, மத்திய அரசின் வணிக சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படவில்லை என்றும், ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறவில்லை, அதில் பணப்பரிமாற்றம் செய்வோரின் வங்கிக் கணக்குகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் குற்றச்சாட்டுகளை முன் வைத்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதுதொடர்பான விசாரணைக்கு ரிசர்வ் வங்கியும், கூகுள் நிறுவனமும் பதிலளித்துவிட்டன.

இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் அபிஷேக் ஷர்மா என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "தரவு உள்ளூர்மயமாக்கல், சேமிப்பு, இருப்பிடப் பகிர்வு விதிமுறைகள் தொடர்பான ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை ’கூகுள் பே’ நிறுவனம் மீறியுள்ளது. எனவே, இவ்விஷயத்தில் ரிசர்வ் வங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். கூகுள் பே நிறுவனத்திற்கு அபராதம் விதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கு, இன்று (ஆக. 24) டி.என்.படேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ”இவ்வழக்கு குறித்து விளக்கமளிக்க ரிசர்வ் வங்கிக்கும், கூகுள் பே மீது குற்றச்சாட்டு தெரிவிக்கும் நபர்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அனைவரின் பதில்களையும் ஆராய்ந்த பிறகுதான் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்க முடியும்” எனக்கூறி, வழக்கை செப்டம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details