தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வெளிமாநில தொழிலாளர்களின் அவலநிலை - உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

டெல்லி: வெளிமாநில தொழிலாளர்களின் அவலநிலையை மத்திய அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

By

Published : Mar 28, 2020, 7:07 PM IST

Workers
Workers

கரோனா வைரஸ் நோயால் இந்தியா முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. பலர் வேலையிழந்து, உணவின்றி தவித்துவருகின்றனர். குறிப்பாக, வெளிமாநில தொழிலாளர்களின் அடிப்படை வசதிகளின்றி பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

இதனிடையே, வெளிமாநில தொழிலாளர்களின் அவலநிலை குறித்து மத்திய அரசு கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்குமாறு அலாக் அலோக் ஸ்ரீவஸ்தவா என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இது குறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், "வெளிமாநில தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களை அருகிலிருக்கும் அரசு தங்கும் விடுதியில் தங்க வைக்க காவல்துறையினர், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். பெண்கள், குழந்தைகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு செல்ல பல கிலோ மீட்டர் நடந்து செல்லும் அவலநிலை தொடர்கிறது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரும்பான்மையான வெளிமாநில தொழிலாளர்கள் ரிக்‌ஷா ஓட்டுநராகவும் கட்டட தொழிலாளியாகவும் இருந்து வருகின்றனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் இவர்களே அதிகம் பாதிப்படைகின்றனர். இவர்களின் அவலநிலையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தினக்கூலிகளுக்கு உணவளித்த நபருக்கு கத்திக்குத்து

ABOUT THE AUTHOR

...view details