இந்த மனு இன்று (ஜூன் 2ஆம் தேதி) விசாரணைக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கோவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்த தகுந்த இடைவெளி, சுகாதாரம் ஆகியவற்றின் வழிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு டெல்லி அரசுக்கு வழிகாட்டவும் இம்மனுவில் கோரிக்கைவைக்கப்பட்டுள்ளது.
'குடிபெயர்ந்தோருக்கு அனைத்தும் செய்துதருக; அதை நீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும்' - Basic Facilities
டெல்லி: குடிபெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க ஆம் ஆத்மி அரசுக்கு அறிவுறுத்துமாறு டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
migrant labourers
சமூக செயற்பாட்டாளர் மனிஷ் சிங் தாக்கல்செய்துள்ள இப்பொதுநல மனுவில், "குடிபெயர்ந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூட விளைந்த சம்பவம், அரசு இயந்திரங்களின் தோல்வியைக் காட்டுகிறது. அவர்களைத் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து நிற்கவைக்கக்கூட அரசால் இயலவில்லை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.