தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

10% இடஒதுக்கீட்டுக்கு எதிராக புதுச்சேரி முதலமைச்சரிடம் மனு! - Plea

புதுச்சேரி: பொதுப்பிரிவினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்த கூடாது என்று திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட 15 கட்சிகள் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியிடம் மனு அளித்தன.

By

Published : May 6, 2019, 3:25 PM IST

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து, பொதுப்பிரிவினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்த கூடாது என்று திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட 15 கட்சிகள் மனு அளித்தன.

இந்த சந்திப்பில், திமுக எம்எல்ஏ சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் முருகன் ,பெருமாள் உள்ளிட்ட பல்வேறு அட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். இது தொடர்பாக விரைவில் தலைமை செயலரிடம் பேசுவதாக முதலமைச்சர் நாராயணசாமி மனுத்தாரர்களிடம் உறுதியளித்தார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியிடம் மனு

ABOUT THE AUTHOR

...view details