பிளாஸ்டிக்கால் ஏற்படும் மாசுபாடு இன்றைக்கு உலகளவில் பெரிய சுற்றுச்சூழல் பிரச்னையாக மாறியுள்ளது. பிளாஸ்டிக் உற்பத்தி அதிலும் குறிப்பாக மறுசுழற்சிக்கு உட்படுத்த முடியாத பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. குப்பை சேகரிப்பு முறை, மறுசுழற்சி செய்யும் முறை உள்ளிட்டவற்றை இந்தியா போன்ற வளரும் நாடுகள் சரியாக பின்பற்றுவதில்லை. இதன் விளைவாக பிளாஸ்டிக் கவனக்குறைவாக அகற்றப்படுகிறது.
மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரிய மதிப்பீட்டின்படி, இந்தியா நாள் ஒன்றுக்கு 26,000 டன் பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்கிறது. இதில் கவலை என்னவென்றால், ஒரு நாளைக்கு 10,000 டன் பிளாஸ்டிக் சரியாக சேகரிக்கப்படுவதில்லை. இதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள அதிகரித்துவரும் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு தகவல் சேகரித்துவரும் இருதய மற்றும் ஆஸ்துமா நிபுணர் சைலேந்திர சைனியை நமது ஈடிவி பாரத் தொடர்பு கொண்டது.
பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமை குறித்து மருத்துவர் சைலேந்திர சைனி! அப்போது அவர், "ஒவ்வொரு ஆண்டும் 10,00,000 பிளாஸ்டிக் பாட்டில்களை மக்கள் வாங்குகிறார்கள். இது அபாயகரமான தகவல். நாள்தோறும், 40 லட்சம் கோடி பேர் பிளாஸ்டிக் பைகளை வாங்குகிறார்கள். அதுமட்டுமின்றி, ஐந்து லட்சம் பிளாஸ்டிக் ஸ்டராக்களையும், ஐம்பது லட்சம் பிளாஸ்டிக் கப்புகளையும் மக்கள் தினமும் வாங்கிச் செல்கின்றனர். பிளாஸ்டிக் பொருள்கள் அதிகமாக பயனபடுத்தவதால் நச்சு ரசாயனங்கள் உடலில் அதிகமாக வெளிப்படுகிறது. இதனால், ஆஸ்துமா ஏற்படுகிறது. பிளாஸ்டிக் பொருள்கள் எரிக்கப்படும்போது உருவாகும் வாயுவை உள்ளிழுப்பதால், ஆக்ஸிஜனை உள்ளிழுக்கும் நுரையீரலின் திறன் குறைகிறது" என்றார்.
பிளாஸ்டிக் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டுவரும் மருத்துவர் சைனி, சுவாச கோளாறால் ஏற்படும் நோய்கள் குறித்து விவரிக்கிறார். பிளாஸ்டிக் பொருள்களை அதிகமாக பயன்படுத்தவதால் ஏற்படும் நோய்கள் குறித்து விளக்கம் அளிக்கிறார். பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக மற்ற பொருள்களை பயன்படுத்த மருத்துவர் வலியுறுத்துகிறார்.
இதையும் படிக்க: நெகிழி இல்லா துர்க்கை கோயில்!