சுற்றுச்சூழலுக்கு தீங்குவிலைவிக்கும் நெகிழியை ஒழித்துக்கட்ட மத்திய - மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வரும் சூழலில், உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் நெகழியிலான பிரமாண்ட நூற்பு ராட்டினம் நிறுவப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளையொட்டி மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி, நாடாளுமன்ற உறுப்பினர் மகேஷ் ஷர்மா, டெல்லி சட்டப்பேரவை உறுப்பினர் பின்கஜ் சிங், நொய்டா அத்தாரிட்டி தலைமை செயல் அலுவலர் ரிது மகேஷ்வரி ஆகியோர் இந்த பிளாஸ்டிக் நூற்பு ஆலையில் திறந்து வைத்தனர்.
ஸ்மருதி இரானி கூறுகையில், "உலகின் மிகப் பெரிய நெகிழி நூற்பு ராட்டனத்தைக் கட்டி எழுப்பிய நொய்டா அத்தாரிடி தலைமைச் செயல் அதிகாரிக்கு என்னுடைய வாழ்த்துகள்" என்றார்.
எப்போதுமே பரபரப்பாகக் காணப்படும் மகாமாயா மேம்பாலுக்கு அடியில் அமைந்துள்ள இந்த நூற்பு ராட்டினத்தை, 14 அடி உயரம், 20 அடி நீளம், 8 அடி அகலத்துடன் கம்பீரமாகவும், அதேசமயம் அழகாகவும் காட்சியளிக்கின்றது. ஆயிரத்து 300 கிலோ நெகிழிக்குப்பைகளால் செய்யப்பட்ட இந்த ராட்டினம், நொய்டா தலைமைச் செயலாளர் ரித்து மகேஷ்வரி பேசுகையில், "இதுபோன்ற மிகப் பெரிய நூற்பு ராட்டினம் உலகில் வேறெங்கும் பார்க்கமுடியாது. திறக்கப்பட்ட அதே நாளில் இந்த ராட்டினம் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றுள்ளது. தற்போது, ஆசிய புக் அஃப் அவார்ட்ஸும் இதனை அங்கீகரித்துள்ளது.
குப்பையும் கோபுரமாகும்... நெகிழியில் உருவான ராட்சத ராட்டினம்! இந்த ராட்டனத்தைக் கட்ட சுமார் ஆயிரத்து 300 கிலோ நெகிழிக் குப்பைகளை பயன்படுத்தியுள்ளோம். ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் நெகிழியின் தீமை குறித்து மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவதும், நெகிழியை மறுசுழற்சி செய்ய ஊக்கவிக்கவும் இந்த ராட்டினம் உதவிகரமாக இருக்கும்" என்றார்.
இதையும் படிங்க: நெகிழிக் கழிவுகளை கலைப்பொருள்களாக மாற்றும் கல்பனா!