தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆகஸ்ட் 1 முதல் புதுச்சேரியில் பிளாஸ்டிக் தடை

புதுச்சேரி: ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் புதுச்சேரியில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்படுவதாக அமைச்சர் கந்தசாமி அறிவித்துள்ளார்.

plastic

By

Published : Jun 21, 2019, 10:51 PM IST

புதுச்சேரியில் பிளாஸ்டிக் தடை விதிப்பது குறித்து முக்கிய ஆலோசனை கூட்டம் இன்று தலைமைச்செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழிலாளர் துறை செயலர் வல்லவன், உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி, புதுச்சேரி பிளாஸ்டிக் தொழில் நிறுவன உரிமையாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தொழில்துறை அமைச்சர் கந்தசாமி, பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பது குறித்து பிளாஸ்டிக் தயாரிப்பாளர், விற்பனையாளர்கள் உள்ளிட்டோருடன் நடத்தப்பட்ட ஆலோசனையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் புதுச்சேரி மாநிலத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்தார்.

பிளாஸ்டிக் தடையை அறிவித்த அமைச்சர் கந்தசாமி

பொது மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் கண்காணிக்க குழு அமைக்கப்படும். அக்குழு தடையை மீறி பிளாஸ்டிக் உபயோகிப்போர் மீது அபராதம் விதிக்கும். மேலும், பிளாஸ்டிக்கிற்கு பதிலாக பாக்குமட்டை, துணிப்பையை கொண்டு மாற்றுப் பொருட்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை இரண்டு முறை தளர்த்தப்பட்ட பிளாஸ்டிக் தடையானது இம்முறை கட்டாயமாக அமல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details