தேசிய தலைநகர் பகுதியின் இதயமாக கருதப்படும் காசியாபாத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் வரும் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே வேகமாக அதிகரித்துவருகிறது. ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களால் வரும் ஆபத்துகள் குறித்து காசியாபாத் மாநகராட்சி, மக்களிடையே செய்துவரும் தொடர் பரப்புரைகளின் விளைவாகவே இது பார்க்கப்படுகிறது.
உத்தர பிரதேசத்திலேயே முதன்முறையாக காசியாபாத்தில், பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு மூன்று சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. காசியாபாத் மாநகராட்சியின் தொடர் பரப்புரைகளின் விளைவாக தற்போது வணிகர்கள் அனைவரும் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்கை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்துவருகின்றனர். இதனால் ஒரு டன் பிளாஸ்டிக் கழிவுகள் மாவட்ட நிர்வாகத்தால் சேமிக்கப்பட்டுள்ளது