தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிட்-19 தீவிர பாதிப்பாளர்களுக்கு பலனளிக்கும் பிளாஸ்மா தெரபி சிகிச்சை - பிலாஸ்மா தெரபி

ஜெய்ப்பூர்: கோவிட்-19 தீவிர பாதிப்பாளர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலனைக் கொடுத்துள்ளது.

Jaipur news  Plasma therapy news  COVID-19 patients news  coronavirus updates  Raj hospital  Sawai Man Singh news  passive immunisation news  Indian Council of Medical Research  Drug Controller General of India  ஜெய்ப்பூர் மருத்துவமனை  பிலாஸ்மா தெரபி  கரோனா பாதிப்பு

By

Published : May 11, 2020, 11:31 AM IST

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலுள்ள மான்சிங் மருத்துவக் கல்லூரியில் கோவிட்-19 தீவிர பாதிப்பாளர் ஒருவருக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த சிகிச்சை நல்ல பலன் அளித்துள்ளதாக மருத்துவக் கல்லூரி கட்டுப்பாட்டாளர் மருத்துவர் சுதீர் பத்தாதிரி கூறினார். கரோனா வைரஸ் தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டு முழுவதும் குணமான பாதிப்பாளரிடமிருந்து ஊநீர் எனப்படும் பிளாஸ்மா தானமாக பெறப்பட்டு இந்தச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

எனினும் இந்தச் சிகிச்சைக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமுற்ற அனைவரும் ஊநீர் எனப்படும் பிளாஸ்மாவை தானமாக அளிக்க முடியாது.

ராஜஸ்தான் மாநிலத்தில் மூவாயிரத்து 708 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 106 ஆக உள்ளது.

இதையும் படிங்க: பிளாஸ்மா சிகிச்சை என்றால் என்ன? விவரிக்கிறார் டாக்டர் ஆஷா கிஷோர்

ABOUT THE AUTHOR

...view details