தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'பிளாஸ்மா சிகிச்சையால் எவ்வித பலனும் இல்லை' - எய்ம்ஸ் இயக்குநர் தகவல் - எய்மஸ் மருத்துவர்கள்

டெல்லி: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் பிளாஸ்மா சிகிச்சையில் குறிப்பிடத்தக்க பலன்கள் எதுவும் ஏற்படுவதில்லை என்று எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

Plasma therapy
Plasma therapy

By

Published : Aug 7, 2020, 4:57 PM IST

கோவிட்-19 தொற்றின் தாக்கம் அமெரிக்கா, பிரேசில், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தற்போது உலகெங்கும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின், ரெம்டெசிவிர் போன்ற பல்வேறு மருந்துகள் கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகின்றன. மேலும், இந்தியாவில் பிளாஸ்மா சிகிச்சை முறையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெல்லியில் முதல்முறையாக செயல்படுத்தப்பட்ட இந்த சிகிச்சை முறை, தற்போது இந்தியாவில் பரவலாகியுள்ளது.

பிளாஸ்மா சிகிச்சை என்றால் என்ன?

கரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் உடலில் இருந்து எடுக்கப்படும் ஆன்டிபாடிகளை, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் செலுத்துவார்கள். இதன் விளைவாக, கரோனாவால் பாதிக்கப்பட்டவரின் உடலில் விரைவாக ஆன்ட்டிபாடிகள் உற்பத்தியாகும்.

"பலன் இல்லை" - எய்ம்ஸ் மருத்துவர்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் பிளாஸ்மா சிகிச்சையால் குறிப்பிடத்தக்க பலன்கள் எதுவும் ஏற்படுவதில்லை என்று எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

இது குறித்து, எய்ம்ஸ் மருத்துவமனையில் 30 நோயாளிகளுடன் முதல்கட்ட ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் பிளாஸ்மா சிகிச்சை மூலம் உயிரிழப்புகளை குறைக்க முடியும் என்பதற்கு வலுசேர்க்கும் விதமாக எவ்வித முடிவுகளும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், இது முதல்கட்ட முடிவுகள்தான் என்பதால் பிளாஸ்மா சிகிச்சை குறித்து மேலும் பல ஆராய்ச்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார். மேலும், "பிளாஸ்மா சிகிச்சை மிகவும் பாதுகாப்பானது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை இதன் மூலம் குணப்படுத்த முடியாது" என்றும் அவர் தெரிவித்தார்.

இதுதவிர பிளாஸ்மா தானம் அளிப்பவர்களின் ரத்தத்தில் போதுமான ஆன்ட்டிபாடி இருந்தால் மட்டுமே சிகிச்சை ஓரளவுக்காவது பலன் அளிக்கும் என்றும் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'கரோனா பரவல் அதிகரித்துள்ளது ; மோடி அரசைக் காணவில்லை' - ராகுல் காந்தி விமர்சனம்

ABOUT THE AUTHOR

...view details