இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், டெல்லி மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு கடந்த புதன் கிழமை கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் டெல்லி ராஜீவ் காந்தி சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமானது. அவரது நுரையீரலில் தொற்று அதிகரித்து மூச்சு விட சிரமம் ஏற்பட்டத்தைத் தொடர்ந்து, அவருக்கு சுவாசக் கருவி பொறுத்தப்பட்டது.
இந்நிலையில், அமைச்சர் சத்யேந்திர ஜெயினினுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. இதற்காக அவர் ராஜீவ் காந்தி சிறப்பு மருத்துவமனையிலிருந்து வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும், அமைச்சர் சத்யேந்திர ஜெயின் விரைவில் கரோனாவிலிருந்து குணமடைய வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜலும் தங்களது ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.
உள் துறை அமைச்சர் அமித் ஷா ட்வீட் டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜல் ட்வீட் இதையும் படிங்க:ஒரே நாளில் 20 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை