புதுச்சேரி உப்பளம் பகுதியில் அமைந்துள்ள பெத்தி செமினார் தனியார் பள்ளியில் இன்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ராஜராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பின்னர், அவர் மாணவர்கள் காட்சிபடுத்தியிருந்த மீன் வளர்ப்பு முறைகள், காடு மாதிரி, பிளாஸ்டிக் தவிர்ப்பு மாதிரி ஆகியவற்றைப் பார்வையிட்டார்.
முன்னதாக, கண்காட்சியில் மாணவர்களிடையே ராஜராஜன் பேசும்போது, "பள்ளியில் வழங்கும் செயல்பாடுகளை (Project) விலை கொடுத்து வாங்காதீர்கள். படிப்பு மட்டுமில்லாமல் தனிமனித சுயஒழுக்கம் மிகமுக்கியம். இதுவே மேலான இடத்திற்கு உங்களைக் கொண்டு செல்லும். படிப்பைத் தவிர்த்து வேறு எதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளாதீர்கள்" என்று பேசினார்.
தொடர்ந்து, மாணவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதில் மாணவர் ஒருவர் சந்திராயன் 3 எப்போது அனுப்பப்படும் என்ற கேள்விக்கு 'விரைவில் அனுப்பப்படும்' என்று அவர் பதிலளித்தார்.