தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வாடிக்கையாளர்களை அதிகரிக்க; டெல்லியில் பீட்சா செய்முறை நேரலை ஒளிபரப்பு! - டெல்லி பீட்சா விற்பனை

டெல்லி: கரோனாவால் குறைந்து வரும் விற்பனையை மேம்படுத்த, டெல்லியில் பீட்சா விற்பனையகம் ஒன்று, பீட்சா விற்பனை முறையை இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பத் தொடங்கியுள்ளனர்.

டெல்லியில் பீட்சா விற்பனையை அதிகரிக்க இணையத்தில் செய்முறை லைவ் ஸ்ட்ரீமிங்
டெல்லியில் பீட்சா விற்பனையை அதிகரிக்க இணையத்தில் செய்முறை லைவ் ஸ்ட்ரீமிங்

By

Published : Jun 5, 2020, 7:36 PM IST

டெல்லியில் உணவுகளை ஹோம் டெலிவரி செய்ய அனுமதியளிக்கப்பட்ட பின், உணவுபெறுகையில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கரோனா பரவல் அச்சம் காரணமாக, அம்மக்கள் பீட்சா உள்ளிட்ட துரித உணவுகளை, ஆன்லைனில் ஆர்டர் செய்வதை வெகுவாகக் குறைத்துள்ளனர்.

இதை சரிகட்ட முடிவு செய்த டெல்லியில் செயல்பட்டுவரும் இன்ஸ்டா பீட்சா விற்பனையகம், கரோனா ஊரடங்கில் விற்பனையை அதிகரிக்கவும்; மேலும் நலிந்துவரும் தொழிலை மேம்படுத்தவும், தாங்கள் எவ்வளவு சுகாதாரத்தோடு பீட்சா உணவை செய்கிறோம் என்பதை www.instapizza.in/crustflix என்ற தங்களின் இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பத் தொடங்கி உள்ளனர்.

அதில், பீட்சா ஆர்டர் வந்தது முதல் சமையல் அறையில் அவர்களின் ஊழியர்கள் கால் ஷு உறை வரை, கடைப்பிடிக்கப்படும் சுத்தம் குறித்து தெளிவாகக் காட்டப்பட்டது.

மேலும் உணவக ஊழியர்கள் முகக்கவசம் அணிந்து கொண்டும்; கைகளை சானிடைஸர் வைத்து சுத்தப்படுத்தியும், அடிக்கடி வெப்பநிலைகளை பரிசோதித்தும் மிகவும் தரமான முறையில் பீட்சாக்களை செய்து வருவதை, இந்த நேரலை ஒளிபரப்பில் மக்களுக்கு காட்டிவருவதாக கடை மேலாளர் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டா பீட்சா விற்பனையகம்

இதையும் படிங்க:பாம்பே உயர் நீதிமன்றத்தின் பெயரை மாற்றக்கோரிய வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details