இந்திய ரயில்வே மற்றும் இந்திய அரசின் கொள்முதல் செயல்பாடுகளில் மேக் இன் இந்தியா தயாரிப்பை ஊக்குவிப்பதற்கு செய்யப்பட்டு வரும் நடவடிக்கைகளை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''இந்திய ரயில்வே துறையில் ஊழல் இல்லாத வெளிப்படையான கொள்முதல் சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் மேக் இன் இந்தியா தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மறுஆய்வு மேற்கொண்டபோது, அரசின் கொள்முதல் செயல்பாடுகளில் உள்ளூர் விற்பனையாளர்களிடம் பங்களிப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப விதிமுறைகள் இருக்க வேண்டும் என்று முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் சுயசார்பு இந்தியா மிஷனுக்கு வலுசேர்க்கும்.