மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப்பைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக, பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கும் டெல்லியில் தர்ணாப் போராட்டம் ஒன்றை நடத்தினார். மேலும், விவசாயிகள் நடத்திய ரயில் மறியல் போராட்டத்தில் மத்திய அரசுக்கு ஆயிரம் கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
பஞ்சாப் விவசாயிகளை சந்தித்துப் பேசிய மத்திய அமைச்சர்கள் - வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்
டெல்லி : விஜியன் பவனில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் பஞ்சாப்பில் இருந்து வந்த விவசாயிகளை சந்தித்துப் பேசினர்.
இந்நிலையில், டெல்லி, விஜியன் பவனில் பஞ்சாப்பில் இருந்து வந்த விவசாயிகளை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பிற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், ”நாங்கள் விவசாயிகளுடன் வெளிப்படையாகப் பேசுவோம், அவர்களின் சந்தேகங்களைத் தீர்க்க முயற்சிப்போம், விரைவில் அனைவரும் தங்கள் பணிக்குத் திரும்பி பண்டிகை காலத்தை கொண்டாடுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். பஞ்சாப் விவசாயிகள் இந்த புதிய சட்டத்தை வரவேற்று அதற்கான பலனைப் பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன்" எனத் தெரிவித்திருந்தார்