தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விழிப்புணர்வு: பியூஷ் கோயல் - CAA 2019

மும்பை: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மூன்று கோடி மக்களைச் சந்தித்து குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என கூறினார்.

CAA Awareness
Piyush Goyal

By

Published : Jan 3, 2020, 3:25 PM IST

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ”இந்தியாவின் பிளவுக்கு காங்கிரஸ்தான் பொறுப்பு. முன்பு பாகிஸ்தானில் 23 விழுக்காடு சிறுபான்மையினர் இருந்தனர். தற்போது மூன்று விழுக்காடாக குறைந்துள்ளது.

இந்தியாவில் சிறுபான்மையினரின் விழுக்காடு அதிகரித்துள்ளது. பாகிஸ்தானைப் போல அந்த விழுக்காடு குறையவில்லை. ஏனெனில் இந்தியா அவர்களைப் பாதுகாத்துள்ளது.

அடுத்த 10 நாட்களில், நாங்கள் மூன்று கோடி மக்களைச் சந்தித்து குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்” என்றார்.

இதையும் படிக்க: 'பாகிஸ்தான் எல்லைக்குள் அமெரிக்க விமானங்கள் இனி செல்ல வேண்டாம்' - எஃப்.ஏ.ஏ. எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details