உலகின் தொன்மையான நகரங்களுள் காசியும் ஒன்று. பழமையான ரிக் வேதத்திலும் காசி பற்றிய குறிப்புகள் உள்ளன. இரட்சிப்பின் பூமியாமக கருதப்படும் காசியிலிருந்துதான் உலகை சிவப்பெருமான் படைத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.
ஒரு மனிதன் தனது கடைசி மூச்சை காசியில் விட்டால் அவர் இரட்சிக்கப்படுவார் என்பது நம்பிக்கை. அந்த வகையில், காசியில் இறந்த உயிர்களுக்கு மோட்சம் அளிக்கும் குளம் ஒன்று அமைந்துள்ளது.
இந்தக் குளத்தில், பல்வேறு காலக்கட்டங்களில் உயிரிழந்தவர்களுக்கு நீத்தார் கடன் சடங்குகள் செய்யப்படுகின்றன. அப்போது அவரின் ஆன்மா சாந்தியடையும் என்பது நம்பிக்கை.
கங்கை தோன்றும் முன்னே உருவான குளம்! காசி மக்களின் கூற்றுப்படி, கங்கை நதி பூமியில் பாய்ந்தோடுவதற்கு முன்னரே இந்தக் குளம் உருவாகிவிட்டது. இங்கு பழமையான போதி மரம் ஒன்றும் அமைந்துள்ளது.
இயற்கைக்கு மாறான தீய அமானுஷ்ய சக்தியால் ஆட்கொள்ளப்பட்டவர்களும் இந்த மரத்தின் அடியில் அமர்ந்தால் குணமடைவார்கள் என்பது ஐதீகம்.
இந்த மரத்தில் ஒரு ரூபாய் காசை வைத்து வழிபட்டால், கடன் தொல்லை நீங்கி இரட்சிப்பு கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. உயிர் நீத்த ஆத்மாக்களுக்கு பிசாசு மோட்ச குளத்தில் மதச் சடங்குகள் அந்தணர்களால் செய்யப்படுகின்றன. இந்தச் சடங்குகள் இறந்த ஆத்மாக்களுக்கு அமைதியை கொடுத்து, பிறருக்கு தொந்தரவு கொடுக்காமல் இருப்பதை உறுதிசெய்கின்றன என்பதும் இவர்களின் கூற்று.
இதையும் பார்க்க:நாட்டின் முதல் நீர்மின் நிலையம்!