ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் லோக்பால் அமைப்பின் முதல் தலைவராகஉச்ச நீதிமன்றமுன்னாள் நீதிபதி பினாகி சந்திரா கோஸ் மார்ச் 23ஆம் தேதி பொறுப்பேற்றார். எட்டு உறுப்பினர்கள் கொண்ட லோக்பால் அமைப்பில் சட்டத் துறையைச் சேர்ந்த நான்கு பேரும், சட்டத் துறையைச் சாராத நான்கு பேரும் உறுப்பினர்களாக இருக்கலாம் என்பது விதி.
அதன்படி, சட்டத் துறையைச் சார்ந்த நான்கு பேர்உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களில் முன்னாள் தலைமை நீதிபதிகள் மூன்று பேர்:
- திலிப் போசலே,
- பிரதீப் குமார் மொகந்தி,
- அபிலாஷ குமாரி,
- சத்தீஸ்கர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அஜய் குமார் திருப்பதி
சட்டத்துறைச் சாராத உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக் கொண்ட நான்கு பேர்:
- மகாராஷ்டிர மாநிலத்தின்முன்னாள் தலைமைச் செயலர்தினேஷ் குமார் ஜெயின்,
- முன்னாள் ஐ.ஆர்.எஸ்.அலுவலர்மகேந்திரசிங்,
- முன்னாள் ஐஏஎஸ்அலுவலர்இந்திரஜித் பிரசாத் கவுதம்,
- சஷத்திர சீமா பால் அமைப்பின் முன்னாள் தலைவரான அர்ச்சனா ராமசுந்தரம்