தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராகுல் கருத்திற்கு சச்சின் பைலட் ஆதரவு - ராஜஸ்தான் முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட்

ஜெய்ப்பூர் : வேலை இழப்பு மற்றும் இந்தியப் பொருளாதாரம் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்களை ராஜஸ்தான் முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளார்.

ராகுல்காந்தி கருத்திற்கு ஆதரவு குரல் கொடுத்த சச்சின் பைலட்!
ராகுல்காந்தி கருத்திற்கு ஆதரவு குரல் கொடுத்த சச்சின் பைலட்!

By

Published : Sep 12, 2020, 9:59 PM IST

ராஜஸ்தான் மாநில முன்னாள் முதலமைச்சர் சச்சின் பைலட் இன்று (செப்.12) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ”நாட்டின் பொருளாதாரம் குறித்த ராகுல் காந்தியின் கருத்து முற்றிலும் நியாயமானது. தாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும் என்று பாஜக உறுதி அளித்திருந்தது. மாறாக, கடந்த சில மாதங்களில் கோடிக்கணக்கான வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

தொழில்கள் முடக்கப்பட்டு பொருளாதாரத்தில் பயங்கரமான நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படுகின்றன. லடாக்கில் நம் எல்லைப் பகுதிகளுக்குள் சீனா நுழைந்துள்ளது. இருப்பினும், பொது கவனத்தை திசை திருப்ப மற்ற பிரச்னைகள் விவாதிக்கப்படுகின்றன.

எவ்வாறாயினும், இந்த விவகாரங்களில் ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் முழு நாடும் மத்திய அரசுக்கு ஆதரவாக நிற்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ராஜஸ்தான் மாநில விவகாரங்களுக்காக காங்கிரஸ் உயர் குழு நியமித்த அஜய் மேக்கன் தலைமையிலான சிறப்புக் குழு, அம்மாநில மக்களிடம் பல்வேறு பிரச்னைகள் குறித்து கருத்துக்களை சேகரிக்க எடுத்த முயற்சியை சச்சின் பைலட் பாராட்டியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details