தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'விவசாய துறையின் 3 புதிய மசோதாக்களும் விவசாயிகளுக்கு எதிரானது' - சச்சின் பைலட் - நாடாளுமன்ற கூட்டத்தொடர் மசோதா

ஜெய்ப்பூர்: விவசாயத் துறை தொடர்பான மூன்று மசோதாக்களும் விவசாயிகளுக்கு எதிரானது என்று ராஜஸ்தான் முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் கருத்து தெரிவித்துள்ளார்.

sach
sach

By

Published : Sep 16, 2020, 8:41 PM IST

விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் மூன்று மசோதாக்களை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் அறிமுகம் செய்தார். அதாவது, விவசாயிகள் உற்பத்தி பொருள் விற்பனை மற்றும் வணிக (மேம்பாடு மற்றம் வசதி) மசோதா, விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகளின் விவசாயிகள் (மேம்பாடு மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம் மசோதா, அத்தியாவசியப் பொருள்கள் திருத்த மசோதா ஆகிய மூன்றையும் தாக்கல் செய்திருந்தனர். முன்னதாக, மத்திய அரசு கொண்டுவந்திருந்த விவசாயத் துறை சாா்ந்த அவசரச் சட்டங்களுக்கு மாற்றாக இந்த மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், விவசாயத் துறை தொடர்பான மூன்று மசோதாக்களும் உழவர்களுக்கு எதிரானது என ராஜஸ்தான் முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "அரசாங்கம் விவசாயிகளுக்கு 'துரோகம்' செய்கிறது. அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மூன்று மசோதாகளும் உழவர்களுக்கு எதிரானது' மற்றும் 'விவசாயத்திற்கு எதிரானது. இந்த மசோதாக்கள் மூலம் விவசாயிகள், பண்ணைத் தொழிலாளர்கள், கமிஷன் முகவர்கள் மற்றும் 'மண்டி' வர்த்தகர்கள் ஆகியோரின் பணிகளில் சிக்கல் ஏற்படும். சிறு விவசாயிகளுக்கு 'நிறுவனங்களின் ஊழியர்களாக' மாறும் பட்சத்தில் ஒப்பந்த விவசாயத்தில் மிகப்பெரிய சிரமம் ஏற்படும். அதற்கு பதிலாக, கிராம அளவில் சிறு விவசாயிகள் அனைவரும் இணைந்து வெகுஜன வேளாண்மை செய்வதற்கான விருப்பத்தை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும். பால் உற்பத்தியை அதிகரிக்க பால் பண்ணையை அவசியமாக்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "2015-16ஆம் ஆண்டு விவசாய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 86 விழுக்காடு விவசாயிகள் 5 ஏக்கருக்கும் குறைவான நிலத்தை வைத்திருக்கிறார்கள், இத்தகைய சூழ்நிலையில் 86 விழுக்காடு பேர் தங்கள் பண்ணை விளைபொருள்களை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல முடியாது. எனவே, அவர்கள் தங்கள் பயிர்களை அருகில் உள்ள சந்தையில் தான் விற்க வேண்டும். எனவே, மண்டி முறையின் நிறுத்துவது விவசாயிகளுக்கு மிகவும் ஆபத்தாக மாறக்கூடும்.

இதுமட்டுமின்றி புதிய மசோதாவின்படி உணவுப் பொருள்களின் சேமிப்பு வரம்பு நீக்கப்பட்டுள்ளது. இந்த வழியில் முதலாளிகள் விவசாய வர்த்தகத்தை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி முழு விவசாய விளைபொருள்களையும் இருப்புக்களில் சேமிக்கப்படும். நாட்டின் விவசாயிகளின் உண்மையான நிலையை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு விரிவான கலந்துரையாடல்களை நடத்தி இந்த சட்டங்களை திருத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details