உத்தரப் பிரதேசம் அமேதியில் உள்ள இந்திரா காந்தி ராஷ்டிரிய உதான் அகாதமி (ஐ.ஜி.ஆர்.யு.ஏ) மையத்தில் இயங்கும் பயிற்சி நிறுவனத்தின் விமானங்களில் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.
உ.பி.,யில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழப்பு! - உ.பி.,யில் பயிற்சி விமானம் விபத்து
லக்னோ: அசாம்கரி பகுதியில் பறந்து கொண்டிருந்த பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
air
அதன்படி, நேற்று காலையும் நான்கு பேர் அமரும் இருக்கைகள் கொண்ட விமானத்தில் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. சரியாக காலை 11.30 மணியளவில் விமானம் அசாம்கர் பகுதியில் பறந்து கொண்டிருக்கும் சமயத்தில் திடீரென விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நிறுவன பணியாளர்கள், காவல் துறையினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதில், ஒரு விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.