தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நடைசாத்தப்பட்ட கேதர்நாத் ஆலயம்:  பனிப்பொழிவில் பக்தர்கள் விளையாடி கொண்டாட்டம் - நடைசாத்தப்பட்ட கேதர்நாத் ஆலயம்

டேஹ்ராடூன்: உத்ரகாண்ட் மாநிலத்தில் உள்ள புனிதத்தலமான கேதர்நாத் சிவன் கோயில் கடும்பனிப்பொழிவின் காரணமாக இன்று மூடப்பட்டது.

நடைசாத்தப்பட்ட கேதர்நாத் ஆலயம்
நடைசாத்தப்பட்ட கேதர்நாத் ஆலயம்

By

Published : Nov 16, 2020, 1:09 PM IST

உத்ரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதர்நாத் சிவன் ஆலயம் கடும்பனிப்பொழிவையொட்டி இன்று நடைசாத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த பஞ்சமுகி அம்பாளின் சிலை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்வதற்காக வெளியில் எடுக்கப்பட்டது.

கடும் பனிப்பொழிவிற்கு இடையே காலை 8.30 மணிக்கு, இந்த ஆலயம் மூடப்படுவதாக, கேதர்நாத் ஆலயத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தகவல் வெளியாகியிருந்தது. இதை ஒட்டி, உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும், உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்தும் காலையில் கேதர்நாத் கோயிலுக்கு வருகை தந்து, நடைசாத்தும் நிகழ்வுக்கு முன்பு நடைபெற்ற பூஜையில் பங்கெடுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்தப் புகழ்பெற்ற ஆலயமானது, இமயமலையின் கர்வால் பகுதியில், மந்தாகினி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இதையொட்டி, அங்கு வந்த பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, அங்கு விழுந்த பனிப்பொழிவில் விளையாடி, புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.

பக்தர்கள் பனிப்பொழிவில் விளையாடி கொண்டாட்டம்

கேதர்நாத் அமைந்துள்ள ருத்ரபிரயாக் மாவட்டத்தில் பனிப்பொழிவு விழுந்து வருகிறது. முன்னதாக இந்திய வானிலை மையமும், உத்ரகாண்ட் மாநில பேரிடர் முன்னறிவிப்பு நிறுவனமும் இன்னும் சில நாள்களுக்கு உத்தர்காசி, ருத்ரபிரயாக், ஷாமோலி, பாகேஸ்வர், பித்தோராகர் மாவட்டத்திலும், டேராஹ்டூன், அல்மோரா மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மழைப்பொழிவும் பனிப்பொழிவும் இருக்கும் என எச்சரித்திருந்தது. குறிப்பாக, பனிப்பொழிவு 3ஆயிரம் மீட்டர் உயரங்களில் தனித்தனியாக இருக்கும் பகுதிகளில் அதிகமாக விழும் என எச்சரித்திருந்தது.

இதையும் படிங்க: கேதார்நாத் அணை வளர்ச்சி திட்டம் குறித்த ஆய்வு!

ABOUT THE AUTHOR

...view details